தங்காலை நகரில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தங்காலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்காலை, ஹேனகடுவ, பன்னவாச மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட கொடிதுவக்கு ஆராச்சிகே சித்துல் சமூதய என்ற வீரகட்டிய நடுநிலைப் பாடசாலையில் உயர் வகுப்பில் கல்வி பயின்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் நேற்று (12) தங்காலை நகருக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=KSJzcmcM3a4&embeds_referring_euri=https%3A%2F%2Fviligal.com%2F52379%2F&source_ve_path=OTY3MTQ&feature=emb_imp_woyt