மட்டக்களப்பில் யானை தாக்கி மீனவர் மரணம்!

Share

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் புத்தம்புரி குளத்துக்குக் கடற்றொழிலுக்காகச் சென்றவரே யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இன்று (13) காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயிலவெட்டுவானைச் சேர்ந்த 42 வயதுடைய கடற்றொழிலாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (12) இரவு கடற்றொழிலில் ஈடுபடச் சென்றுள்ளார். இதையடுத்து வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் இன்று (13) காலை தேடிச் சென்றுள்ளனர். இதன்போது குளத்துக்கு அருகாமையில் யானையின்  தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் குறித்த நபர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கரடியனாறு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=KSJzcmcM3a4&embeds_referring_euri=https%3A%2F%2Fviligal.com%2F52379%2F&source_ve_path=OTY3MTQ&feature=emb_imp_woyt

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு