யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தென்மராட்சி, சாவகச்சேரிப் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியுடம் மோட்டார் சைக்கிளும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=KSJzcmcM3a4&embeds_referring_euri=https%3A%2F%2Fviligal.com%2F52379%2F&source_ve_path=OTY3MTQ&feature=emb_imp_woyt