ஈரானிய பிரஜைகள் மூவர் கைது! – 1 கோடியே 32 இலட்சம் ரூபா அபராதம்

Share

ஈரானிய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கராஜா வனப்பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களைச் சேகரித்து கொண்டிருந்தபோது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ வன அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கும் உடுகம நீதிவான் நீதிமன்றம் 1 கோடியே 32 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 44 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு