நீர்கொழும்பு – லெல்லம என்ற இடத்தில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், குறித்த நபர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர் என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.