மலையக எழுச்சி நடை பயணத்தில் மஹிந்த தேசப்பிரியவும் பங்கேற்பு!

Share
மலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவும் ஆதரவு வழங்கியுள்ளார்.

தம்புள்ளையில் இருந்து இன்று (11) காலை ஆரம்பமான பாத யாத்திரையில் பங்கேற்று அவர் தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.

மலையகத் தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக எழுச்சிப் பயணம்’ முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2023 ஜுலை 28 ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமான குறித்த பாத யாத்திரை நாளை 12 ஆம் திகதி மாத்தளையைச் சென்றடையவுள்ளது. நேற்று (10) ஓய்வு எடுக்கப்பட்டது. இன்று (11) காலை மீண்டும் யாத்திரை ஆரம்பமானது.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய ‘மாண்புமிகு மலையக மக்கள்’ கூட்டிணைவினால் இப்பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு