நாடாளுமன்றில் ஒலித்தது மலையகக் குயில் அசானியின் பெயர்!

Share

“இந்திய Zee Tamil (ஜி தமிழ்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்வில் புசல்லாவை, நயாபன தோட்ட சிறுமியான அசானி பங்கேற்றுள்ளார். மலையக மக்களைக் கௌரவப்படுத்தும் வகையில் அவர் பாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

மலையகப் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடிவேல் சுரேஷ் எம்.பி., அசானியைப் பாராட்டிப் பேசினார்.

“1982, 1992 பற்றி மாத்திரம் தற்போது பேச முடியாது. மலையகத்தில் திறமையானவர்கள் உள்ளனர், கல்விமான்கள் உருவாகியுள்ளனர்” – என்றும் வடிவேல் சுரேஷ் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக எழுச்சிப் பாத யாத்திரைக்கும் அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

https://youtu.be/DKUHvegvTkk

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு