பொய்ப் பிரசாரம் செய்வோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை! – நாமல் எச்சரிக்கை

Share
“மின் கட்டணம் செலுத்த வேண்டும் என எனக்கு எதிராகச் சிலர் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். குறித்த நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

மின்சார சபைக்குத் தான் எழுதிய கடிதத்துக்கும் இதுவரை பதில் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்துக்காக இலங்கை மின்சார சபை விநியோகித்த மின்சாரத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என மின்சார சபை தெரிவித்திருந்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை மின்சார சபை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

2019 ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வீரகெட்டிய வீட்டில் நடந்த திருமண வைபவத்துக்கு வழங்கிய தற்காலிக மின் விநியோகத்துக்காக 26 இலட்சத்து 82 ஆயிரத்து 246 ரூபா செலுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை கூறியிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலங்கை மின்சார சபை அவ்வாறான எந்தவொரு மின் கட்டணப் பட்டியலையும் தங்களுக்கு இதுவரை அனுப்பவில்லை எனவும், மின் கட்டணப் பட்டியல் எப்போது அனுப்பப்பட்டது என்பதை அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு