பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்தச் சம்பவத்தில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் உட்பட இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.