13 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்! – தாயின் இரண்டாவது கணவர் மீது குற்றச்சாட்டு

Share

13 வயதுச் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து வாழ்கின்றார். அவரது இரண்டாவது கணவரே சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொண்டுள்ள கோப்பாய் பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு