கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் அல்லர்; விடுதலைப்புலிகளே! – சிங்கள ராவய அமைப்பு கொந்தளிப்பு

Share

“கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்லர். அனைவரும் விடுதலைப்புலிகளே. அவர்களை இங்கே நினைவுகூர அனுமதிக்க முடியாது.”

– இவ்வாறு சிங்கள ராவய அமைப்பினர் கோஷம் எழுப்பினர்.

கொழும்பு பொரளை பொதுமயானத்துக்கு அருகில் கறுப்பு ஜூலை இனப்படுகொலை நினைவேந்தல் நேற்று கடைப்பிடிக்கத் திட்டமிட்ட நிலையில் சிங்கள ராவயவினர் அங்கு வந்து குழப்பம் விளைவித்தனர். இதன்போதே இவ்வாறு கோஷம் எழுப்பினர்.

“புலம்பெயர் தமிழர்கள் நாட்டைப் பிரிக்க முயல்கின்றார்கள். அரச சார்பற்ற நிறுவனங்களிடம் பணத்தைப் பெற்று இப்படியான நினைவேந்தல்களை இங்கு செய்யவேண்டாம்” – என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு