தென்மராட்சியில் ரயிலில் மோதி வயோதிபர் சாவு!

Share

யாழ்ப்பாணம், தென்மராட்சி, மீசாலை – புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

மீசாலை கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மீசாலை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ரயில் கடவையை அண்டியே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வயோதிபர் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே விபத்தில் சிக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு