யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்! – 7 பேர் காயம்

Share

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், குருநகர் – சிறுத்தீவுப் பகுதிக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சென்று பொழுதைக் கழித்துள்ளனர்.

அவர்கள் ஒரு கட்டத்தில் கடலில் இறங்கி நீராடும் போது, அருகில் இருந்த கடலட்டைப் பண்ணைக்குள்ளும் நுழைந்துள்ளனர். அதனால் கடலட்டைப் பண்ணையில் காவலில் இருந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் முற்றி இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதில் 7 மாணவர்களும், கடலட்டைப் பண்ணை உரிமையாளர் ஒருவரும், பண்ணை பணியாளர் ஒருவருமாக 9 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு