உகந்தை மலை முருகன் வருடாந்த மகோற்சவம் 18 ஆம் திகதி ஆரம்பம்! (Photos)

Share

உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

15 நாட்கள் தொடர்ந்தும் பூஜைகள் இடம் பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற்று 03 ஆம் திகதியன்று வைரவர் பூஜையுடன் இவ்வருடத்துக்கான உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

அத்துடன் உகந்தை மலை முருகன் ஆலயத்துக்குப் பாதயாத்திரை செல்லும் ஏற்பாடுகளும் கிழக்கில் இடம்பெற்று வருகின்றது.

இலங்கையில் காணப்படும் வரலாற்று சிறப்பு மிக்க தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

முருகக் கடவுளின் சூரசம்ஹார வரலாற்றுடன் மிக நெருங்கிய தொடர்புடைய திருத்தலமாக உகந்தை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு