உலகம் சுற்றும் பெண்ணாகத் திகழும் சந்திரிகா!

Share

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உலகம் சுற்றும் பெண்ணாகத் திகழ்கின்றார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

அரசியலில் ஓய்வு பெற்ற பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அந்த ஓய்வைக் கழிப்பார்கள். சிலர் சமூக சேவைகளில் ஈடுபடுவார்கள், சிலர் திரைமறைவில் இருந்து அரசியல் செய்வார்கள். ஆனால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் எப்படி அந்த ஓய்வைக் கழிக்கின்றார் தெரியுமா?

தனது பிள்ளைகளுடன் – பேரப்பிள்ளைகளுடன் ஒவ்வொரு நாட்டுக்கும் அவர் சுற்றுலா சென்று பொழுதைக் கழிக்கின்றார். அவர் அண்மையில் எகிப்துக்குச் சென்றிருக்கின்றார்.

மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் சிலர் கடந்த வாரம் நாடாளுமன்றில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது அவர்களின் மெய்ன் டொபிக்கே இதுதான். உண்மையில் சந்திரிகா மெடம் போலத்தான் ஓய்வைக் கழிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள் – என்றுள்ளது.

இவ்வாறிருக்கையில் சந்திரிகா அம்மையாரை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டுவரவும் திரைமறைவில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு