மேலுமொரு பஸ் விபத்தில் 8 பேர் காயம்! (Photo)

Share

புத்தளத்திலிருந்து – நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்ற சொகுசு பஸ் ஒன்று, கம்பளை – நூவரெலியா பிரதான வீதியின் ஹெல்பொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

22 பேர் பயணித்த மேற்படி சொகுசு பஸ், மண் திட்டில் மோதி – பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்

காயமடைந்த 8 பேரில் நால்வர் கொத்மலை பிராந்திய வைத்தியசாலையிலும், நால்வர் புஸ்ஸல்லாவ வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=N6ZeA9T9An4&embeds_referring_euri=https%3A%2F%2Fviligal.com%2F51371%2F&embeds_referring_origin=https%3A%2F%2Fviligal.com&feature=emb_imp_woyt

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு