பஸ் விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு ஆளுநர் பணிப்பு!

Share

பொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலனறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்குச் சென்ற பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இந்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் விபத்துக்குள்ளானவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு