வன்னி இராணுவத் தலைமை அலுவலகத்துக்கு முன்பாகத் தீக்குளிக்க முயன்ற குடும்பப் பெண்!

Share

வவுனியாவில் ஏ – 9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவத் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இன்று (05) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருநாகல், வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய குறித்த பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச் சென்ற நிலையில் இரு தரப்பினரும் சில மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் வன்னி இராணுவத் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. எனினும், சில வாரங்களாக குறித்த இராணுவச் சிப்பாயின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த குறித்த குடும்பப் பெண் அவரைத் தேடி வன்னி இராணுவத் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற போதிலும் குறித்த இராணுவச் சிப்பாயைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண் தலைமை அலுவலகத்துக்கு முன்பாகத் தீக்குளிக்க முற்பட்ட வேளை வவுனியா பொலிஸாரால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்

குறித்த பெண்ணுக்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு