புலம்பெயர் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் ரணில்! – சாணக்கியன் வலியுறுத்து

Share

“பொறுப்புக்கூறல் தொடர்பில் புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிப்பதை தவிர்க்கும் வகையிலும் கேள்வி எழுப்பியவரை அவமதிக்கும் வகையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்றிட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் பேசுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கருத்துரைத்தார். அங்கு இடம்பெற்ற ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ‘ஆங்கிலத்தில் பேசுவது கடினமாயின் தமிழ் மொழியில் பேசுங்கள்’ என அவரை அவமதிக்கும் வகையில் கருத்துரைத்துரைத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் அந்தத் தமிழர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம். பொறுப்புக்கூறல் தொடர்பில் அவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி அவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆகவே, புலம்பெயர் தமிழர்களிடம் ஜனாதிபதி மன்னிப்புக் கோர வேண்டும்.

இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால், இதுவரை முன்னேற்றகரமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஒரு வாரத்துக்குள் நாடாளுமன்றத்துக்குள் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்து ஆதரவைப் பெற்றுக்கொள்ள அவரால் முடியுமாயின் ஏன் நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். ஆனால், அதற்கான அக்கறை அவருக்கு இல்லை என்பது புலப்படுகின்றது.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு