யாழ். போதனா வைத்தியசாலையில் மைத்திரி! (Photos)

Share

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை சென்றார்.

மைத்திரிபால சிறிசேனவை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி வரவேற்றார்.

தொடர்ந்து வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களோடும் கலந்துரையாடினார்.

சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜனாதிபதி பதவிக் காலத்தில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டடத் தொகுதியையும் அவர் பார்வையிட்டார்.

அதேவேளை, இன்று காலையில் பிறந்த ஆண் குழந்தையொன்றுக்கும் தனது ஆசீர்வாதங்களை மைத்திரிபால வழங்கினார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு