யாழில் பழக்கடை வியாபாரி கடத்தல்: 4 இளைஞர்கள் கைது!

Share

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் நால்வர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் தட்டிக் கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியைக் கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“நேற்றுப் பகல் யாழ்ப்பாணம் நகர பழக்கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் இழுத்து ஏற்றிக் கடத்திச் செல்லப்பட்டார்.

அவரைக் கடத்திச் சென்றவர்கள் உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கி காணொளி பதிவு செய்துள்ளனர். படுகாயப்படுத்திவிட்டு அவரை கைவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்தனர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பழக்கடை வியாபாரியால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே பழக்கடை வியாபாரியைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், கத்தி மற்றும் காணொளிப் பதிவு செய்த விலை உயர்ந்த அலைபேசி என்பன கைப்பற்றப்பட்டன.

குறித்த பழக்கடை வியாபாரி, பழம் வாங்க வந்த பெண் ஒருவருடன் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அது தொடர்பில் கேட்கச் சென்றவரின் கழுத்தில் கத்தியை வைத்து பழக்கடை வியாபாரி மிரட்டியுள்ளார். அதனால்தான் அவரை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினோம் என்று சந்தேகநபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்” – என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு