பிரான்ஸ் பொலிஸாரின் இனவெறிப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும்! – ஐ.நா. வலியுறுத்து

Share

பிரான்ஸ் கலவரம் குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“பிரான்ஸ் அரசு தனது பொலிஸாரின் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞன் பிரான்ஸ் பொலிஸாரால் கொல்லப்பட்டது. எங்களை கவலையடையச் செய்துள்ளது.

பிரான்ஸ் அரசு இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளைத் தீவிரமாகக் கையாள வேண்டும்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் விதிமீறி செயற்பட்டார் என்பதற்காக நீல் (வயது 17) என்ற இளைஞர் மீது பொலிஸார் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் பல இடங்களில் பாரிய வன்முறையாக மாறியுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 875 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 40 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், இளைஞரைக் சுட்டுக்கொலை செய்த பொலிஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு