தையிட்டியில் விகாரையமைத்த பிக்குவின் ஆடையைக் களைய வேண்டும்! – மறவன்புலவு சச்சி கோரிக்கை

Share

யாழ்., தையிட்டியில் விகாரையைக் கட்டிய பிக்குவின் ஆடையைக் களைய வேண்டும் என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ். மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இந்து மத குருமாரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன்போது இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனும் பங்கேற்றிருந்தார்.

இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:–

“பாபர் மசூதிகளை (இந்தியாவில் அமைக்கப்பட்டது. இந்துக்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டு பின்னர் இடிக்கப்பட்டது) இந்துப் பிரதேசங்களில் உருவாக்காதீர்கள். தையிட்டியில் உருவாக்கப்பட்டதும் பாபர் மசூதியே. அதைக்கட்டிய பிக்குவின் ஆடையைக் களைய வேண்டும்.

புத்த சங்கத்தை அழைத்து ஒழுக்கநெறியைக் கற்பியுங்கள். காசியப்பன், அசோகன், வட்டகாமினி வழியிலே நீங்களும் இவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்ற வேண்டும். இது உங்களுடைய கடமை.

இந்து சமயத்துக்கும் முன்னுரிமை கொடுத்து மத மாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டுவாருங்கள் என்று கேட்கின்றேன்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துங்கள்.” – என்றார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு