இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை! – தந்தை படுகாயம்

Share

ஹகுரன்கெத்த பிரதேசத்தில் காணிப் பிரச்சினையால் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

முகத்தில் மிளகாய் பொடியை வீசி தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டதில் தந்தையும் மகனும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 22 வயதுடைய மகன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தங்கவேலு சண்தலு சந்துஷ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஜப்பானில் வேலை பெறுவதற்காக அவர் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஹகுரன்கெத்த – உடவத்தகும்புரவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற இந்தத் தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு மிளகாய் பொடியை கொடுத்த பெண் ஒருவரை ஹகுரன்கெத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணி ஒன்றின் உரிமை தொடர்பில் இவ்விரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றதையடுத்து பிரதான சந்தேகநபரின் வீட்டுக்குச் சிலர் தீ வைத்து எரித்துள்ளனர்.

தலைமறைவான சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹகுரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு