யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடந்து சாதனை படைத்த இரட்டையர்கள்!

Share

மலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள், யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து, கொழும்பு – காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளனர்.

சுமார் 400 கிலோமீற்றர் தூரத்தை, 32 மணித்தியாலங்களில் நடைபயணமாகக் கடந்து அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.

பொகவந்தலாவை – கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தயாபரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இரட்டையர்களே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – கோட்டையில் இருந்து தமது நடைபயணத்தை ஆரம்பித்த அவர்கள், 32 மணித்தியாலங்களில் கொழும்பு – காலிமுகத்திடலை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.

பன்னாட்டுச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் இந்தச் சாதனையை அங்கீகரித்துச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு