ரணில் – ராஜபக்ச அரசால் நாட்டை மீட்கவே முடியாது! – தேர்தல் வேண்டும் என்கிறார் கிரியெல்ல

Share

வீழ்ச்சியடைந்த எமது நாட்டை ரணில் – ராஜபக்ச அரசால் மீட்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

எனவே, உடனடியாகத் தேசிய மட்டத்திலான தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சர்வதேச உதவி கிடைக்கும் என ஆட்சியாளர்கள் கூறினாலும், குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு இன்னும் உதவி கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டை மீட்பதற்காக எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு