உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெறும் தகுதிகாண் போட்டியில் விளையாட சிம்பாப்வே சென்ற இலங்கை கிரிக்கெட் அணியினர் தங்கும் வசதிக்காக அல்லல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அணிக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டல் வளாகத்தில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலிருந்து சிம்பாப்வே சென்றுள்ள இலங்கை அணியினர் இரண்டு பயிற்சிப் போட்டிகளின் பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் போட்டியுடன் இணையவுள்ளது. இந்நிலையில், ஹோட்டல் வசதியின்றி சுற்றித்திரியும் இலங்கை அணி வீரர்களின் பல படங்களையும் சமூக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே ஹோட்டலுக்குச் சென்றமையால் இந்த நிலை ஏற்பட்டது என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.