உக்ரைனுக்குக் கனடா பிரதமர் திடீர் விஜயம்!

Share

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் தலைநகருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கனடா பிரதமரின் விஜயத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கனடா ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்கத்திய அரச தலைவர்களின் பெரும்பாலான வருகைகளைப் போல் ட்ரூடோவின் வருகை அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரை தலைநகரில், ரஷ்யாவுடனான போரில் இறந்த இராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சுவரில் மலர் வளையம் வைத்து ட்ரூடோ தனது அஞ்சலியைச் செலுத்தினார்.

2022 பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யாவின் பெரிய அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து ட்ரூடோ உக்ரைனுக்கு மேற்கொண்ட இரண்டாவது விஜயம் இதுவாகும்.

ட்ரூடோ கடைசியாக உக்ரைனுக்கு 2022 ஆம் ஆண்டு மே மாதம் விஜயம் மேற்கொண்டு இருந்தார்.

மே 2023 இல், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கனடா பிரதமர் ட்ரூடோவுடன் ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினார்.

அதில் அவர் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பின் திட்டத்தைப் பற்றி விவாதித்தார். மேலும், கனடாவில் ரஷ்ய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடக்கத்தையும் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில், கனடா அரசு 39 மில்லியன் கனடிய டொலர்கள் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு