ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் இந்த குழாம் அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய, குறித்த குழாமின் தலைவராக தசுன் சானக்க பெயரிடப்பட்டுள்ளார்.
அத்துடன், குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஸ்மந்த சமீர, கசுன் ராஜித, லஹிரு குமார, மகீஷ் தீக்ஷன, மத்தீஷ பத்திரண மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டி சிம்பாப்வேயில் இடம்பெறவுள்ளது.
இதில் பங்குகொள்வதற்காக குறித்த இலங்கை கிரிக்கெட் குழாம் இன்று (10) சிம்பாப்வே நோக்கி பயணிக்கவுள்ளது.