சப்ரகமுவ ஆளுநர் இராஜிநாமா! – ஜனாதிபதிக்குக் கடிதம்

Share

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

2023 ஜூன் 10 ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2019 செப்டெம்பர் 18 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

குறித்த மாகாணங்களின் முந்தையை ஆளுநர்களை ஜனாதிபதி பதவி விலக்கியதன் பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு