ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதையடுத்து, பதிலுக்குத் துடுப்பாடிய இலங்கை அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் பெத்தும் நிஸ்ஸங்க 51 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தப் போட்டியில் சிறப்பாட்டக்காரராக வனிந்து ஹசரங்கவும், தொடரின் சிறந்த வீரராக துஷ்மந்த சாமீரவும் தெரிவாகினர்.
இந்தநிலையில், 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை, இலங்கை அணி 2 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.