யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்ட கூட்டத்தில் அரச புலனாய்வாளர்களால் அவர் தாக்கப்பட்டமை மற்றும் பொலிஸாரால் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, பொலிஸ்மா அதிபரிடம் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணித்துள்ளார்.