ஆடைத் தொழிற்சாலையின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் பரிதாபச் சாவு!

Share

ஆடைத் தொழிற்சாலையின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கியதில் இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

வஸ்கடுவ – பொக்குணவத்தை வீதியில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் அச்சு இயந்திரத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இயந்திரம் திடீரென இயங்கியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தலையில் படுகாயமடைந்த இளைஞர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு