16 வயது சிறுமி 40 முறை கத்தியால் குத்திக் கொலை! – காதலன் வெறியாட்டம் (Photo)

Share

16 வயது சிறுமி 40 முறை கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் காதலன் இந்த வெறிச்செயலைப் புரிந்துள்ளார்.

இந்தியாவின் தலைவர் டில்லியில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் நடந்த இந்தப் படுகொலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.

டில்லி ரோகினி பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சாக்ஷி என்ற இளம்பெண், அமைதியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரைத் பின்தொடர்ந்து வந்த அவரது சாஹல் என்ற 20 வயது மதிக்க தக்க காதலன், சரமாரியாக கத்தியால் 40 முறைகள் குத்தியுள்ளார்.

இருந்தும் கோபம் தணியாமல் அருகில் கிடந்த பெரிய பாராங்கல்லை எடுத்து மீது பலமுறை போட்டு சிறுமியின் தலையை அவர் நொறுக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுமி இரத்தம் பெருக்கெடுத்து ஓட துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்துபோனார். அந்த வழியாகச் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அந்தச் சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியில் யாரும் இறங்கவில்லை. அந்த இளைஞரை நெருங்குவதற்குப் பலரும் பயந்துள்ளனர்.

இது பற்றி பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து, இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பான சி.சி.ரி.வி. வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக டில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் டில்லி பொலிஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

“நடந்த குற்றம் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது. அதை மக்கள் பலர் பார்த்துள்ளனர். ஆனாலும் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பாற்ற நகரமாக டில்லி மாறிவிட்டது” – என்று ஸ்வாதி மாலிவால் கூறி உள்ளார்.

சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த சாஹல் உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் ஷஹபாத் டெய்ரி காவல் நிலையத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சிகரமான கொலைக்குக் கடும் கண்டனம் தெர்வித்துள்ளார். “டில்லியில் ஒரு சிறுமி கொடூரமான முறையில் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்டார். இது மிகவும் வருத்தம் மற்றும் துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளிகள் அச்சமற்றவர்களாகிவிட்டனர், பொலிஸுக்கு அவர்கள் பயம் இல்லை. எல்.ஜி.சார், சட்டம் – ஒழுங்கு உங்கள் பொறுப்பு, ஏதாவது செய்யுங்கள். டில்லி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது” – என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு