16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு இடம்பெறுகின்றது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய, சென்னை அணியின் தலைவர் தோனி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளார்.
16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நேற்றிரவு அகமதாபாத்தில் பெய்த கடும் மழை காரணமாகப் போட்டி கைவிடப்பட்டிருந்தது.