யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் – கல்விளான் பகுதியைச் சேர்ந்த இராசதுரை நிரோஜா (வயது 24) என்ற பெண்ணே நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அவரது வீட்டில் இருந்து 300 மீற்றர்கள் தொலைவில் உள்ள கிணற்றிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=yRfEdnvaq-0