உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக், வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸை நேரில் சந்தித்து உக்ரைன் மக்களுக்காகக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இந்த உரையாடலின் போது, போர் முடிவுக்கு வரத் தொடர்ச்சியாகப் பிரார்த்தனை செய்வதாக பாப்பரசர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நான் பாப்பரசர் பிரான்சிஸைச் சந்தித்தேன். மில்லியன் கணக்கான உக்ரைனியர்களின் சோகத்துக்கு அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தியமைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன்.
நாடு கடத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான உக்ரைன் குழந்தைகளைப் பற்றி நான் பேசினேன். அவர்களை வீடு திரும்பச் செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கூடுதலாக, உக்ரைனில் நடக்கும் ரஷ்யாவின் குற்றங்களைக் கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.