வவுனியாவில் மாயமான மாணவர்கள் அனுராதபுரத்தில் மீட்பு! – நடந்தது என்ன?

Share

வவுனியா, செட்டிகுளம் – மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வந்த மன்னார் – முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் காணாமல்போன நிலையில் அனுராதபுரத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.

செட்டிகுளம் – மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த இரு மாணவர்களும் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று வருவது வழமை.

கடந்த திங்கட்கிழமை பழுதடைந்த சைக்கிளுக்கு டயர் வேண்டுவதற்காகச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் விடுதி திரும்பவில்லை.

அதன் பின்னர் இரவு 8 மணியளவில் குறித்த விடுதியின் காப்பாளர், காணாமல்போன மாணவர்களின் பெற்றோருக்குத் தொடர்பு எடுத்து அவர்கள் வீட்டுக்கு வந்தார்களா என்று கேட்டுள்ளனர்.

குறித்த பெற்றோர் ஏதேனும் பிரச்சினையா என்று கேட்ட போது விடுதி காப்பாளர்களால் மேற்படி விபரம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக விடுதி பங்குத் தந்தையர்களால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன் சமூக வலைத்தளங்களிலும் இரு மாணவர்களினதும் புகைப்படங்களும் பகிரப்பட்டன.

இந்நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் நேற்றுப் புதன்கிழமை 2 மாணவர்களும் அனுராதபுரம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும், இவர்களை யாரேனும் கடத்திச் சென்றார்களா அல்லது அவர்களவே சென்றனரா போன்ற விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு