இலங்கையில் எலிக்காய்ச்சல் தாண்டவம்! – வைத்தியர்கள் எச்சரிக்கை

Share

நாட்டில் எலிக்காய்ச்சலின் தாக்கம் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது என்று இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், அந்தச் சங்கத்தின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் சமூக நல வைத்திய அதிகாரி குஷானி தாபரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சிறுபோகம் இடம்பெறும் மார்ச் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியிலும், பெரும்போகம் இடம்பெறும் செப்டெம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கின்றது.

எனவே, குறித்த காலப்பகுதியில், விவசாயிகளுக்கு, இது தொடர்பில் தெளிவுபடுத்தி, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், எலிக்காய்ச்சல் பரவலில் இருந்து, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் வைத்தியர் குஷானி தாபரே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு