முடிவுக்கு வந்தது தையிட்டிப் போராட்டம்!

Share

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டம், நேற்றிரவு 8 மணியளவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட செயற்பாடு தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு எனப் போராட்டகாரர்கள், கடந்த மூன்று நாட்களாகப் பதாகைகளைத் தாங்கியவாறு தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

14 குடும்பங்களுக்குச் சொந்தமான அண்ணளவாக 100 பரப்புகி காணியை விடுவிக்கக் கோரியும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பௌத்த கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்த மயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு