தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ருப் தோட்டத்தில் இன்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தரம் 8 இல் கல்வி கற்ற 13 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தற்கொலையா? கொலையா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்றபோது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
சிறுமியின் பெற்றோர் கொழும்பில் வேலைக்காகச் சென்றுள்ளனர் எனவும், தனது தாத்தா, பாட்டியின் பாதுகாப்பிலேயே சிறுமியும் அவரது சகோதரனும் வாழ்ந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.