புத்தர் சிலைக்கு அடியில் இருந்து ஆண் சிசு ஒன்று மீட்பு!

Share

பிறந்த ஆண் சிசு ஒன்று, புத்தர் சிலைக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தேகம – எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் இருந்து குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சிசு வத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலைக்கு அடியில் ஆண் சிசு ஒன்று உயிருடன் காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள் அதனை எடுத்துச் சென்று வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர் என்று வத்தேகம பொலிஸார் தெரிவித்த்தனர்.

குழந்தை நலமுடன் இருக்கின்றது என்று வத்தேகம வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் குழந்தையைப் பிரசவித்த தாய் குறித்து அறிந்துகொள்ள வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு