வெளிநடப்புச் செய்த எம்.பிக்கள் தையிட்டியில் போராட்டத்தில் குதிப்பு! (photos)

Share

யாழ்ப்பாணம், தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த விகாரையை அகற்றக் கோரியும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதைக் கண்டித்து, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தையிட்டி பகுதிக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாகத் தாமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் நடைபெற்றது. அதன்போது கூட்டத்தில் பங்குபற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தவர்கள் மாவட்ட செயலகத்தில் இருந்து நேராக தையிட்டிப் பகுதிக்குச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் இணைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு