இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட மனோபாலா தமது 69 ஆவது வயதில் இன்று காலாமானார்.
தமிழில் சுமார் 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் இவர் அண்மைக்காலமாக தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை நேர்காணல் செய்து வருகின்றார்.
இந்தநிலையில் அண்மையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார்.