யாழில் விகாரையைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்று போராட்டம்!

Share

யாழ்., வலிகாமம் வடக்கு, தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பௌத்த விகாரையைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வலி. வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பலரும் ஒன்றிணைந்து இந்தக் கண்டனப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய இன்று பிற்பகல் 3 மணிக்கு தையிட்டியில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு