பொலிஸ் சீருடையுடன் ஆட்டம் போட்ட கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!

Share

இசை நிகழ்ச்சியின் மேடையில் சீருடையில் நடனமாடினார் எனக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைப் பணி இடைநிறுத்தம் செய்யப் பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி களனி – பியகமவிலுள்ள விளையாட்டரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போதே இந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் மேடையில் ஏறி பாடகர் ஒருவரின் பாடலுக்கு நடனமாடினார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு