மனைவியைத் தீ வைத்துக் கொலைசெய்த கணவன் தீக்காயங்களுடன் கைது!

Share

மனைவியைத் தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சேதவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 24ஆம் திகதி கொட்டுவில பாடசாலைக்கு முன்பாக வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அதன்போது, தனது உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவர், மனைவியையும் கட்டியணைத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்தநிலையில், சிகிச்சை பெற்றுவந்த 44 வயதான மனைவி நேற்று உயிரிழந்தார்.

சிகிச்சை பெற்று வரும் கணவர் (வயது 54) வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு