இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடன்பாட்டை இவ்வாண்டுக்குள் எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய மே தினக் கூட்டத்தில் இணைய வழியில் (ZOOM) பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.