அமைச்சரவை மறுசீரமைப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு!

Share

உத்தேச அமைச்சரவை மறுசீரமைப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கவலையில் உள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளது எனக் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகத் தகவல்கள் பரவிய நிலையில், தமக்குப் பதவிகள் கிடைக்கும் என மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட எம்.பிக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

மொட்டுக் கட்சியில் யார், யாருக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற பெயர்ப்பட்டியலும் ஜனாதிபதிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும், அமைச்சரவை மாற்றம் தற்போது நடைபெறாது என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு