வவுனியாவில் ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்!

Share

வவுனியா, எல்லப்பர் – மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞர் எடுத்துள்ளார்.

இதன்போது வயரியில் மின்சார ஒழுக்குக் காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கை பட்டதையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே இளைஞர் மரணமடைந்துள்ளார்.

29 வயதுடைய நா.கபிலன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு